மாவட்ட செய்திகள்

கோவில் இடத்தில் இருந்த பாதை அகற்றம் + "||" + Removal of the Path of the Temple

கோவில் இடத்தில் இருந்த பாதை அகற்றம்

கோவில் இடத்தில் இருந்த பாதை அகற்றம்
திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதையை அகற்ற உத்தரவிட்டார்.
பெரம்பலூர்,

பெரம்பலூர்-விளாமுத்தூர் சாலையில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி அருகே சாலையோரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து, அவர்களின் இடத்திற்கு செல்வதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதை அமைத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதையை அகற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நேற்று அரியலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர்கள் மணி, பாரதிராஜா, யுவராஜ், யுவராஜா, ரமே‌‌ஷ், பெரம்பலூர் ஆய்வாளர்கள் சட்ட நாதன், கருணாகரன், வருவாய்த்துறையினர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதை அகற்றப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து அந்த இடத்தில் அந்நியர்கள் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. மீறினால் சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை கோவில் சார்பில் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாற்று இடம் வழங்க மக்கள் கோரிக்கை
தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து அங்கு வசித்த மக்கள் திறந்தவெளியில் வசிப்பதால், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. பக்தர்கள் கை குலுக்கக்கூடாது; கோவில், தேவாலயங்கள், மசூதிகளுக்கு கட்டுப்பாடு - தமிழக அரசு அறிவிப்பு
ஊரக பகுதிகளில் உள்ள கோவில்கள், சிறிய தேவாலயங்கள் மற்றும் சிறிய மசூதிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை பின்பற்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3. ஊரடங்கு தளர்விற்கு பிறகு குமரியில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்
ஊரடங்கு தளர்விற்கு பிறகு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
4. கோவில் பூட்டை உடைத்து திருட்டு பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியல்களை வீசி சென்ற மர்மநபர்கள்
கீரனூரில் கோவில் பூட்டை உடைத்து திருட்டு பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியல்களை வீசி சென்ற மர்மநபர்கள்.
5. அனுமதியின்றி இறைச்சி விற்றால் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
அனுமதியின்றி இறைச்சி விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.