மாவட்ட செய்திகள்

கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு + "||" + The Central Government emphasized the importance of the study In Erode Court Maoists chant because of chanting

கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு

கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு
கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தர வலியுறுத்தி ஈரோடு கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,

சென்னிமலை, கடத்தூர், கோபி, அம்மாபேட்டை ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளுக்குள் சிலர் போலி ஆவணங்கள் கொடுத்து செல்போன் சிம்கார்டுகள் வாங்கினார்கள். இதுகுறித்த புகார்களின் பேரில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த ரூபேஸ், வீரமணி, கண்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வீரமணி, கண்ணன் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ரூபேஸ் கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர்கள் 3 பேர் மீதும் ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி உமாமகேஸ்வரி வழக்கை விசாரித்தார். அப்போது ரூபேஸ், வீரமணி, கண்ணன் ஆகிய 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

அதன்பின்னர் மாவோயிஸ்டுகள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டுக்கு வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர்கள், கீழடி ஆய்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர்கள் 3 பேரும் சிறைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்துக்கு தூய்மை இந்தியா திட்ட நிதி எப்போது வழங்கப்படும்? - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
தமிழகத்துக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ம் கட்ட நிதி எப்போது வழங்கப்படும்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி - ராகுல் காந்தி
இளைஞர்களுக்கு வேவைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
3. எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்
எல்ஐசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி விற்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
4. முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை
முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.
5. சுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஆழ்துளை கிணறு அமைப்பதால் பரபரப்பு
சுண்ணாம்புக்கற்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஆழ்துளை கிணறு அமைப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.