மாவட்ட செய்திகள்

அனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் + "||" + Deputy Superintendent of Police requests to have a surveillance camera mounted on all jewelery

அனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

அனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
அனைத்து நகைக்கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன் (திருத்துறைப்பூண்டி), இன்ஸ்பெக்டர் அறிவழகன் (கோட்டூர்), சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவதாஸ், பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி கூறுகையில்,

அனைத்து நகைக்கடை, அடகுகடைகளிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். திருடர்கள் திருட முயற்சித்தால் சத்தம் கேட்கும் வகையில் அலாரம் பொருத்த வேண்டும்.

ஒத்துழைப்பு

இரவு காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில் நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளர் சங்க தலைவர் நாராயணமூர்த்தி, செயலாளர் இளங்கோவன், அடகுக்கடை சங்க செயலாளர் ஆதப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராமர் கோவிலுடன் அரசியலை தொடர்புபடுத்தக்கூடாது; ராமஜென்மபூமி அறக்கட்டளை வேண்டுகோள்
ராமர் கோவிலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்று ராமஜென்மபூமி அறக்கட்டளை தெளிவுபடுத்தி உள்ளது.
2. குமரி மாவட்ட போலீசாருடன், சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆலோசனை
குமரி மாவட்ட போலீசாருடன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுமக்களுடன் நல்லுணர்வை வளர்க்க வேண்டும் என போலீசாரை அறிவுறுத்தினார்.
3. பொதுமக்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் கிரண்பெடி வேண்டுகோள்
பொதுமக்கள் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலிலை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும் என்பதால் இணையவழி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.