மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் தம்பி வெட்டிக்கொலை: வேலூர் கோர்ட்டில் 5 வாலிபர்கள் சரண் + "||" + Kanjiipuram Rowdy Sridhar's younger brother killed 5 men surrendered to the Court in Vellore

காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் தம்பி வெட்டிக்கொலை: வேலூர் கோர்ட்டில் 5 வாலிபர்கள் சரண்

காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் தம்பி வெட்டிக்கொலை: வேலூர் கோர்ட்டில் 5 வாலிபர்கள் சரண்
காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் தம்பி கருணாகரன் கொலை வழக்கு சம்பந்தமாக 5 வாலிபர்கள் வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
வேலூர், 

காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திக்குன்றம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசனின் தம்பி கருணா என்கிற கருணாகரன் (வயது 32). இவர் பிரபல ரவுடி ஸ்ரீதரின் சித்தப்பா மகன் ஆவார். கருணாகரன் காஞ்சீபுரம் வணிகர்வீதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருடைய பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் மாலை ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இந்த பூஜையில் கருணாகரனும் கலந்து கொண்டார். மாலை 6 மணியளவில் 5 மோட்டார் சைக்கிளில் 10 பேர் கொண்ட மர்மகும்பல் ஹெல்மெட் அணிந்தபடி பயங்கர ஆயுதங்களுடன் பைனான்ஸ் நிறுவனத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த கருணாகரன், விக்னேஷ் ஆகியோரை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கருணாகரன் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விக்னேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பியோடிய மர்மகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கருணாகரன் கொலை வழக்கு சம்பந்தமாக காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்த மணிமாறன் (24), விஜய் (20), துளசிராமன் (24), மணிகண்டன் (23), காந்தி (24) ஆகிய 5 பேர் வேலூர் கோர்ட்டில் (ஜே.எம்.-4) நேற்று காலை சரண் அடைந்தனர். அவர்கள் 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஜெகன்நாதன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 5 பேரும் வேனில் பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சீர்காழியில், தலைமை ஆசிரியர் மனைவி கொலை: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது
சீர்காழியில், தலைமை ஆசிரியர் மனைவி இரும்பு பைப்பால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அடித்துக்கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
2. தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முக்கிய தடயங்களை ஆய்வு செய்தனர்.
3. தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை இன்று தொடங்குகிறது
தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று (புதன்கிழமை) விசாரணையை தொடங்குகிறார்கள்.
4. மூதாட்டி கொலை வழக்கில் கைது: கொரோனா பாதித்த வாலிபர் தப்பி ஓட்டம்
மூதாட்டியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5. அறந்தாங்கி அருகே ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொலை அண்ணன் உள்பட 3 பேர் கைது
அறந்தாங்கி அருகே குடும்ப பிரச்சினையில் பெயிண்டர் ஈட்டியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை