மாவட்ட செய்திகள்

உர விற்பனையில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் + "||" + Abuse of fertilizer sales Co-operative society secretary fired

உர விற்பனையில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்

உர விற்பனையில் முறைகேடு கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
உர விற்பனையில் முறைகேடு செய்ததாக கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரத்தில் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக கோவிந்தராஜன், துணைத்தலைவராக சங்கர் ஆகியோர் உள்ளனர்.

இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக குமாரராஜன்(வயது55) பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சங்கத்தில் முறைகேடு நடப்பதாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

உரவிற்பனையில் முறைகேடு

இதன்பேரில் கூட்டுறவு மாவட்ட பதிவாளர் மாரீஸ்வரன் உமையாள்புரம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது உர விற்பனையில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த பணத்தை உடனடியாக கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்க செயலாளர் குமாரராஜனுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கூட்டுறவு சங்க செயலாளர் குமாரராஜன் பணத்தை கட்டிவிட்டார்.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில் உர விற்பனையில் முறைகேடு செய்ததற்கு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் குமாரராஜனை கூட்டுறவு மாவட்ட பதிவாளர் மாரீஸ்வரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் கூட்டுறவு சங்கத்தின் பொறுப்புகளை அங்கு பணிபுரியும் வேறு ஒருவரிடம் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
புதுவை வந்த காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
2. கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கு: வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.
3. விழுப்புரத்தில் காதல் திருமண புகார்-கைது எதிரொலி: ரெயில்வே போலீஸ்காரர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
விழுப்புரத்தில் காதல் திருமண புகார், கைது எதிரொலியாக ரெயில்வே போலீஸ்காரர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
4. சிறுவன் தலையில் பாய்ந்த 4 அங்குல அம்பு அறுவை சிகிச்சைக்கு பின் நீக்கம்
மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுவனின் தலையில் 4 அங்குல அளவிற்கு பாய்ந்திருந்த அம்பு அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது.
5. காங்கிரசில் இருந்து முன்னாள் எம்.பி. நீக்கம்
காங்கிரசில் இருந்து முன்னாள் எம்.பி. நீக்கப்பட்டார்.