மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + In the Nellai district On 7 plaintiffs in one day Law of the thug

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நெல்லை,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி மேலவடக்கு தெருவை சேர்ந்தவர் மாயாண்டி என்ற கட்டமாயாண்டி (வயது 23). சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூர்ணஆனந்த் (24). மூலர்கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா என்ற குரளி சிவா (28). இவர்கள் மீது வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.

மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூர் காலனி தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (24), நடுவக்குறிச்சி இந்திராநகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (32). இவர்கள் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார் (மானூர்), ராஜாராம் (சேரன்மாதேவி) ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

அதை கலெக்டர் ‌ஷில்பா ஏற்று கட்டமாயாண்டி, பூர்ணஆனந்த், சிவா, மகாராஜன், வேல்முருகன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் வழங்கினார்கள்.

இதேபோல் நெல்லை அருகே உள்ள கட்டுடையார்குடியிருப்பை சேர்ந்தவர் இசக்கிமுத்து (28), தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர்கள் மீது கொலை மிரட்டல், அச்சுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாநகர துணை போலீஸ் கமி‌‌ஷனர் சரவணன், உதவி போலீஸ் கமி‌‌ஷனர் பெரியசாமி, மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபால் பர்னபாஸ் ஆகியோர் மாநகர போலீஸ் கமி‌‌ஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதை கமி‌‌ஷனர் (பொறுப்பு) பிரவீன்குமார் அபிநபு ஏற்று இசக்கிமுத்து, மணிகண்டன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறை அதிகாரியிடம் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு: ஒரே நாளில் 10 அரசு பஸ்கள் ஜப்தி
நிலம் கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்காததால் நேற்று ஒரே நாளில் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் 10 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2. புராதன சின்னங்களை கண்டுகளிக்க மாமல்லபுரத்தில் ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் கடும்போக்குவரத்து நெரிசல்
மோடி-ஜின்பிங் சந்திப்பை தொடர்ந்து, மாமல்லபுரத்தில் அனைத்து புராதன சின்னங்களையும் கண்டுகளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
3. காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
4. சுற்றுச்சூழலை பாதுகாக்க 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது - அமைச்சர் ராஜலட்சுமி தகவல்
நெல்லை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகிறது என அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
5. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 72,750 பேர் எழுதினர்
நெல்லை மாவட்டத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 72,750 பேர் எழுதினார்கள். 15 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.