மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சினையில் தொழிலாளி குத்திக்கொலை; உறவினர் கைது + "||" + Worker murder on family issues; Relative arrest

குடும்ப பிரச்சினையில் தொழிலாளி குத்திக்கொலை; உறவினர் கைது

குடும்ப பிரச்சினையில் தொழிலாளி குத்திக்கொலை; உறவினர் கைது
மேலூர் அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உறவினரை போலீசார் கைது செய்தனர்.
மேலூர்,

மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் ஹக்கீம்(வயது 43). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஹக்கீமை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதற்கிடையே அவர் மதுரையில் உள்ள கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அ.வல்லாளபட்டியில் உள்ள தனது தம்பி அப்பாஸ் வீட்டிற்கு ஹக்கீம் சென்றார். அங்கு அவர் குடிபோதையில் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அப்பாசின் மனைவி மரியம்பீவி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஹக்கீம் தகாத வார்த்தைகளால் பேசி, மரியம்பீவியை தாக்கியுள்ளார்.

இதனை பார்த்து கொண்டிருந்த மரியம்பீவியின் தம்பி முகமது இப்ராகிம்(27) ஆத்திரமடைந்து, வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியால் ஹக்கீமை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) சுந்தரமாணிக்கம், மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு ஹக்கீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கொலை தொடர்பாக மேலவளவு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முகமது இப்ராகிமை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை அருகே தொழிலாளி கொலையில் 3 பேர் கைது
நெல்லை அருகே தொழிலாளி கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. மாமியாருடன் தகராறு: 3 மகன்களுக்கு வி‌‌ஷத்தை கொடுத்து பெண் தற்கொலை முயற்சி - விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே மாமியாருடன் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் தனது 3 மகன்களுக்கு வி‌‌ஷத்தை கொடுத்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
3. சேலம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது திடுக்கிடும் தகவல்கள்
சேலம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவருடைய மனைவியே கொன்று விட்டு நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.