மாவட்ட செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டிற்கு ஆபத்தானது இல.கணேசன் பேட்டி + "||" + Seeman's talk on Rajiv Gandhi assassination is dangerous to the country

ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டிற்கு ஆபத்தானது இல.கணேசன் பேட்டி

ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டிற்கு ஆபத்தானது இல.கணேசன் பேட்டி
ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டிற்கு ஆபத்தானது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
அரியலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டுக்கு ஆபத்தானது. அவர் இவ்வாறு பேசுவது ஒன்றும் புதிதல்ல. கொல்லப்பட்டவர் தனி நபரல்ல. நாட்டின் பிரதமர். அந்நியநாட்டு சக்திகள் நம் நாட்டு பிரதமரை கொன்றுள்ளதால் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இந்த வழக்கை தீவிரமாக கண்காணிக்கும். சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் சந்தித்து பேசியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதனால் சீனா, இந்தியா நல்லுறவு மேம்பட்டுள்ளது. வரும் காலங்களில் சீனா இந்தியா பொருளாதார வளர்ச்சியை எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது.

முன்னேற்றம் கண்டுள்ளது

நாட்டின் பொருளாதாரம் சரிந்துள்ளது தற்காலிகமானது. விரைவில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நிதி அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையிலும், நமது நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடும் வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம், ஆளுநர் வசம் ஒப்படைத்துள்ளது. அதனை அவரே தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுப்பார். தமிழக பா.ஜ.க. தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சி பதவிகளும் ஜனநாயக முறையில் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டு நியமிக்கப்படுவார்கள்

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில்தான் கவனம் உள்ளது:“நாங்கள் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை” அமைச்சர் பேட்டி
“கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில் தான் எங்கள் கவனம் உள்ளது. நாங்கள் தேர்தலை பற்றி சிந்திக்கவில்லை“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
2. மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும் உறவினர்கள் கண்ணீர் பேட்டி
மூணாறு நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்கள் அனைவரின் உடல்களையும் மீட்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
3. “கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனாவால் பலியானவர்களின் இறப்பு விகிதத்தை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
4. ‘கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன்’ சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த சரண்யா பேட்டி
கிராமப்புற மேம்பாட்டுக்காக தனிக்கவனம் செலுத்துவேன் என சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த சரண்யா தெரிவித்தார்.
5. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் குமாரசாமி பரபரப்பு பேட்டி
பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.