மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையை குளிர்வித்த சாரல் மழை + "||" + Northeast monsoon rains in Chennai

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையை குளிர்வித்த சாரல் மழை

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையை குளிர்வித்த சாரல் மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்றும் (வியாழக்கிழமை) மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் பரவலாக மழை கிடைத்து இருந்தது. தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

அந்தவகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவில் இருந்தே மழை பெய்ய தொடங்கிவிட்டது. கடந்த மாதம் இறுதி வரையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. அதன்பிறகு வறட்சியான நிலையே காணப்பட்டு வந்தது. வெயிலும் வாட்டி வதைத்தது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னை மற்றும் புறநகரில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே கருமேகங்கள் சூழ்ந்தபடி பல இடங்களில் சாரல் மழை இடைவெளி விட்டு பெய்தது.

அண்ணாசாலை, கிண்டி, சைதாப்பேட்டை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், பாரிமுனை, ராயபுரம் மற்றும் காசிமேடு உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக பெரும்பாலான புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்தது. அதேநேரம் சில இடங்களில் சாரல் மழை பெய்தவாறு, வெயிலும் அடித்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேலும் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) மழை தொடரும் என்றும், இடைவெளிவிட்டு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த சாரல் மழையால் கடந்த சில நாட்களாக கடும் உஷ்ணத்துடன் இருந்த சென்னை சற்று குளிர்ந்து இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டுகிறது. குண்டாறு, ராமநதி அணைகள் நிரம்பி வழிகின்றன.
2. கடந்த 5-ந் தேதி சூறாவளி காற்றுடன் மழை: மும்பையில் ரூ.500 கோடி சேதம் - உடனடி நிவாரணம் வழங்க பிரதமரிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை
மும்பையில் ரூ.500 கோடிக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், எனவே மத்திய அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்தார்.
3. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை:நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
4. சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத் கொண்டு செல்லும் பணி தொடங்கியது - 10 லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டன
சென்னையில் பீதியை கிளப்பிய அமோனியம் நைட்ரேட்டை ஐதராபாத்துக்கு கொண்டு செல்லும் பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக 10 லாரிகளில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.
5. தமிழகத்தில் பெய்து வரும் மழை: உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.