மாவட்ட செய்திகள்

மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் + "||" + Devotees in large numbers attended the Manjayankanpatti Muttalamman temple festival

மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
மஞ்சாநாயக்கன்பட்டி முத்தாலம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே மஞ்சாநாயக்கன்பட்டியில் பிரசித்திபெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை நடத்த கிராம மக்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஊர் பொதுக்கிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு மேள தாளம் வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கையுடன் கோவிலுக்கு கரகத்தை பக்தர்கள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

நேர்த்திக்கடன்

தொடர்ந்து நேற்று திரளான பக்தர்கள் கோவிலில் ஒன்று கூடி பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராடுதல் மற்றும் கரகம் பொதுக்கிணற்றில் விடுதலுடன் திருவிழா முடிவடைகிறது. திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமை சிவலிங்கம்பிள்ளை தலைமையில் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று பக்தர்கள் இன்றி நடந்தது.
2. பாரம்பரிய நெல் சாகுபடிக்கு அரசு உரிய அங்கீகாரம் வழங்கும் அமைச்சர் காமராஜ் பேச்சு
பாரம்பரிய நெல் சாகுபடிக்கு அரசு உரிய அங்கீகாரம் வழங்கும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
3. பக்தர்கள் கை குலுக்கக்கூடாது; கோவில், தேவாலயங்கள், மசூதிகளுக்கு கட்டுப்பாடு - தமிழக அரசு அறிவிப்பு
ஊரக பகுதிகளில் உள்ள கோவில்கள், சிறிய தேவாலயங்கள் மற்றும் சிறிய மசூதிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை பின்பற்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. கடத்தூர் அருகே ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடி திருவிழா பொதுமக்களை போலீசார் விரட்டினர்
கடத்தூர் அருகே ஊரடங்கை மீறி ஏரியில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்களை போலீசார் விரட்டினர்.
5. ஊரடங்கை மீறி ஏரியில் திரண்டு மீன்பிடித்த கிராம மக்கள் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்
குன்னம் அருகே ஊரடங்கை மீறி ஏரியில் திரண்டு மீன்பிடித்த கிராம மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.