மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்; மு.க.ஸ்டாலின் மீது அன்பழகன் தாக்கு + "||" + Honey rubs on tongue of AIADMK volunteers; On MK Stalin Anbazhagan Unsure

அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்; மு.க.ஸ்டாலின் மீது அன்பழகன் தாக்கு

அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்; மு.க.ஸ்டாலின் மீது அன்பழகன் தாக்கு
அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் மு.க. ஸ்டாலின் தேன் தடவுகிறார் என்று அன்பழகன் எம். எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஆதரவாக அன்பழகன் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்து வருகிறார். நேற்று பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்களுடன் சேர்ந்துதான் காங்கிரசார் வாக்குசேகரித்து வருகின்றனர். அவர்களை ராஜீவ்காந்தியின் ஆன்மாகூட மன்னிக்காது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை குறைகூறி கட்சி நடத்தினார். ஆனால் மு.க.ஸ்டாலின் இப்போது அ.தி.மு.க. தொண்டர்களின் நாவில் தேன் தடவுகிறார்.

புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி இருந்தபோது மாநில அந்தஸ்துக்காக குரல் கொடுத்து இருப்பார்களா? புதுவையின் முதல்-அமைச்சராக தகுதிபெற்றவர் ரங்கசாமிதான். விபத்தில் முதல்-அமைச்சர் ஆனவர் நாராயணசாமி. இது புதுவைக்கு இருண்ட காலம்.

புதுவை மாநிலத்தில் திருட்டு லாட்டரி விற்பனைக்கு ஏஜெண்டு யார்? ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 400 கோடிக்கு இந்த திருட்டு லாட்டரி விற்பனை ஆகிறது. இப்போது அந்த கும்பல் ஆன்லைன் லாட்டரிக்கு சென்றுவிட்டது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.வில் புதிய அமைப்பு செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நியமித்து உள்ளனர்.
2. தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம்
தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. கொரோனா காலத்தில் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான அறிக்கை எதுவும் கொடுக்கவில்லை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
கொரோனா காலத்தில் அதை தடுக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான அறிக்கைகள் எதுவும் கொடுக்கவில்லை என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.
5. முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் புதுவையின் பொருளாதாரத்தை அரசு சீரழித்து விட்டது என்று அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...