மாவட்ட செய்திகள்

கொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது + "||" + In the Kolli Mountain Forest A man with a gun Arrested

கொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது

கொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது
கொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யப்பட்டார்.
சேந்தமங்கலம், 

கொல்லிமலை சேளூர்நாடு வனப்பகுதியில் சிலர் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அவர்கள் வேட்டைக்கு அதனை பயன்படுத்துவதாகவும் வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் நேற்று அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே சேளூர்நாடு ஊராட்சி அரைக்கல்பட்டியை சேர்ந்த விவசாயி மூவேந்தர் (வயது 30) துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தவர்.அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகூர் அருகே வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
நாகூர் அருகே வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. குடிபோதையில் தகராறு: மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது
கோவையில் குடிபோதையில் மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. திருவாரூர் ரவுடி கொலையில் திடுக்கிடும் தகவல்: ஜாமீனில் எடுத்து நண்பர்களே தீர்த்துக்கட்டிய பயங்கரம்
திருவாரூரில் நடந்த பிரபல ரவுடி கொலை வழக்கில், அவரது நண்பர்களே ஜாமீனில் எடுத்து தீர்த்து கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 9 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது
கணியம்பாடி வட்டாரத்தில் 350 பசுமாடுகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. சின்னசேலம் ; வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
சின்னசேலம் அருகே தென்பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் ரகு (வயது 24), அதே கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (23).