மாவட்ட செய்திகள்

திருவள்ளூர், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் + "||" + Tiruvallur, Public grievance day meeting

திருவள்ளூர், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் சாலைவசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, வீட்டுமனைபட்டா, வேலைவாய்ப்பு, கடனுதவி, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 279 மனுக்களை அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப் பட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது.
3. திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
4. திருவள்ளூர் அருகே, சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - வாலிபர் உயிர் தப்பினார்
திருவள்ளூர் அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
5. திருவள்ளூர் அருகே, மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி
மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தவறிவிழுந்த 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.