மாவட்ட செய்திகள்

மீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் + "||" + Risk of transmission of stagnant rainwater to fish stalls

மீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்

மீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்
மீன்சுருட்டி கடைவீதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் குண்டவெளி ஊராட்சி மீன்சுருட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இப்பகுதியில் வடிகால் சரியில்லாததால் சாலையில் பல இடங்களில் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக .மீன்சுருட்டி கடை வீதி, பஸ்நிறுத்தம், செல்லியம்மன் கோவில் செல்லும் சாலை, புதுத்தெரு அருகே மற்றும் தோப்புத் தெரு செல்லும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது மட்டுமின்றி, சாலையில் நின்று பஸ்சில் ஏறக்கூடமுடியாத நிலை உள்ளது. சாலை முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுகள் உற்பத்தியாகி நோய்களை பரப்பும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரங்களில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவை தடுக்க முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று இந்த பகுதி பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்னல் வேகத்தில் பரவும் நோய் தொற்று: மதுரையில் ஒரே நாளில் டாக்டர்கள் உள்பட 204 பேருக்கு கொரோனா
மதுரையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 204 பேர் பாதிக்கப்பட்டனர்.
2. மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
3. ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவும் அபாயம்: ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
4. புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு ஒரே பஸ்சில் இட நெருக்கடியில் பயணம் செய்த அரசு ஊழியர்கள் கொரோனா பரவும் அபாயம்
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு ஒரே பஸ்சில் இட நெருக்கடியில் பயணம் செய்த அரசு ஊழியர்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
5. வெளியிடங்களுக்கு சென்று கூடலூருக்கு திரும்பிய 78 லாரி டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
வெளியிடங்களுக்கு சென்று கூடலூருக்கு திரும்பிய 78 லாரி டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.