மாவட்ட செய்திகள்

நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Tirunelveli Railway employees The demonstration

நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை, 

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் நெல்லை கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.

ரெயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கி வரும் விரைவு ரெயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அமிதாப்காந்த் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். ரெயில்வே துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர்களை கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ரெயில்வே நிர்வாகம் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ரெயில்களை பராமரிக்கும் பணிகளை பன்னாட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க கூடாது.

வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் நலன்கருதி இடமாறுதலை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்பை பறித்து, ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட உதவி தலைவர் சுப்பையா, தொழிற்சங்க நிர்வாகிகள் சுவாமிதாஸ், மகராஜன், லட்சுமணபெருமாள் ஆகியோர் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழரசன், ராமசாமி, கவுதம், வேல்முருகன் சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்: நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு - தனி வார்டில் தீவிர சிகிச்சை
நெல்லையில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் ஆவார்கள்.
2. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பீடித்தொழிலாளர்கள் 4 லட்சம் பேர் தவிப்பு - கொரோனாவால் வேலையிழந்த பரிதாபம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனாவால் பீடித்தொழிலாளர்கள் 4 லட்சம் பேர் வேலையிழந்து தவித்து வருகிறார்கள்.
3. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 24 பேர் கைது - வள்ளியூரில் திருமணங்கள் நிறுத்தம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். வள்ளியூரில் திருமணங்கள் நிறுத்தப்பட்டன.
4. நெல்லையில் பட்டப்பகலில் மனைவி கண் முன்னே பயங்கரம்: கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்த தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
நெல்லையில் பட்டப்பகலில் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்த தொழிலாளியை அவரது மனைவி-மகன் கண் முன்னே 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
5. கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.