மாவட்ட செய்திகள்

வீடுபுகுந்து கொடுவாளால் வெட்டி பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை + "||" + Man sentenced to 7 years rigorous imprisonment

வீடுபுகுந்து கொடுவாளால் வெட்டி பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை

வீடுபுகுந்து கொடுவாளால் வெட்டி பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை
ஓமலூர் அருகே வீடு புகுந்து பெண்ணை கொடுவாளால் வெட்டி, நகையை பறித்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து ஓமலூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ஓமலூர்,

ஓமலூரை அடுத்த மைலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரசு (வயது 27). இவருடைய கணவர் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளி. சரசு கடந்த 15.4.2013 அன்று வீட்டில் இருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டார். சரசு வீட்டுக்குள் தண்ணீர் எடுக்க சென்றபோது பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் சரசு கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரசு அந்த மர்ம நபரை தடுத்தார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் அவரை வெட்டினார். இதில் சரசுவின் கை விரல்கள் துண்டானது. தலையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

சிறை தண்டனை

இதுகுறித்த புகாரின்பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சின்னவெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (39) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஓமலூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்து நீதிபதி தயாநிதி நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், சரசுவை கொடுவாளால் வெட்டி தங்க சங்கிலியை பறித்ததற்காக கிருஷ்ணமூர்த்திக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், திருடும் எண்ணத்துடன் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்ததற்காக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கட்ட தவறினால் ஒவ்வொரு வழக்கிலும் தலா 2 மாதம் சிறை தண்டனையும், இதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வைரவேல் ஆஜராகி வாதாடினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 புதுவை போலீஸ்காரர்கள் பணிநீக்கம்
புதுவையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
2. மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகை பறிப்பு
மோட்டார்சைக்கிளில் தந்தையுடன் சென்ற மாணவியிடம் 3½ பவுன் நகை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
3. ஆத்தூரில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் போலீஸ்காரர்கள் போல் நடித்து 2 பேர் துணிகரம்
ஆத்தூரில் போலீஸ்காரர்கள் போல் நடித்து மூதாட்டியிடம் 11 பவுன் நகை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. மொபட்டில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
பெரம்பலூரில் பட்டப்பகலில் மொபட்டில் சென்ற பெண்ணை கீழே தள்ளி விட்டு 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. குமரி மாவட்டத்தில் தொடர் கைவரிசை: பெண்களிடம் தங்க சங்கிலி பறித்த வாலிபர் கைது 50 பவுன் நகைகள் மீட்பு
குமரி மாவட்டத்தில் பெண்களிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.