மாவட்ட செய்திகள்

இடைத்தேர்தலில் வெற்றி: கரூர், லாலாபேட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம் + "||" + Winning by-elections: AIADMK celebration in Karur, Lalapet

இடைத்தேர்தலில் வெற்றி: கரூர், லாலாபேட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

இடைத்தேர்தலில் வெற்றி: கரூர், லாலாபேட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதையொட்டி கரூர், லாலாபேட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.
கரூர்,

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதையொட்டி கரூரில் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர். காளியப்பன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கரூர் மத்திய நகர செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு நகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், வடக்கு நகர செயலாளர் பாண்டியன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் என்.தானேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

லாலாபேட்டை

இதேபோல கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இளங்குமரன் தலைமையில் லாலாபேட்டை பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர். இதில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கள்ளப்பள்ளி ஆனந்த்பாபு, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மைதிலி செல்லத்துரை, கள்ளப்பள்ளி ஊராட்சி செயலாளர் சக்திவேல் உள்பட திரளான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கிருஷ்ணராயபுரம் பகுதிகளிலும் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த நடிகை நமீதா
அ.தி.மு.க.விலிருந்து விலகி நடிகை நமீதா பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
2. அரபி கடலில் நடந்த பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
3. ‘பிருத்வி-2’ ஏவுகணை சோதனை வெற்றி
இன்று இரவு நடத்தப்பட்ட ‘பிருத்வி-2’ ஏவுகணை சோதனை வெற்றிபெற்றது.
4. ஒடிசாவில் 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் இரவு நேர ஏவுகணை பரிசோதனை வெற்றி
ஒடிசாவில் 2 ஆயிரம் கி.மீ. இலக்கை தாக்கி அழிக்கும் இரவு நேர ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
5. ‘இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம்’ - ரோகித்சர்மா கருத்து
வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு தான் காரணம் என்று பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்தார்.