மாவட்ட செய்திகள்

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கலெக்டர் ரத்னா வழங்கினார் + "||" + Collector Ratna presented an awareness leaflet on dengue fever

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கலெக்டர் ரத்னா வழங்கினார்

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கலெக்டர் ரத்னா வழங்கினார்
அரியலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
அரியலூர்,

தமிழக முதல்- அமைச்சரின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் மற்றும் செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளுக்கு கலெக்டர் ரத்னா நேரில் சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதையும், வீடு வீடாகவும், திறந்த வெளிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் வழங்கினார்.

ஆய்வின்போது, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, டாக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 முககவசங்கள் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கொரோனா தொற்று பரவலை தடுக்க குடும்ப அட்டையில் உள்ள ஒருவருக்கு தலா 2 முககவசங்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
2. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க வேண்டும், சிலை கரைப்புக்காக மக்கள் வெளியே வரக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
3. புதுக்கோட்டை அருகே ரூ.8 லட்சத்தில் கண்மாய் வடிகால் தூர்வாரும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை அருகே ரூ.8 லட்சம் செலவில் கண்மாய் வடிகால் தூர்வாரும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
4. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் ரூ.985 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
வேலூர் மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.985 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5. வங்கிகள் கடன் இலக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகள் கடன் இலக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...