மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏ.சி., கம்ப்யூட்டர் எரிந்து சேதம் + "||" + Kancheepuram At the Central Co-operative Bank Fire accident

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏ.சி., கம்ப்யூட்டர் எரிந்து சேதம்

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏ.சி., கம்ப்யூட்டர் எரிந்து சேதம்
காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு இருந்த, ஏ.சி., கம்ப்யூட்டர் தீயில் எரிந்து சேதம் ஆனது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ளது காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை. நேற்று காலை வங்கியின் மேலாளர் ரவீந்திரன் வங்கியின் கதவை திறந்தார். அப்போது வங்கியில் புகைமூட்டம் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து அவர் காஞ்சீபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி முரளி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து புகைமூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.

இருப்பினும் தீ விபத்தில் வங்கியில் இருந்த ஒரு கம்ப்யூட்டர், இன்வெர்ட்டரில் இயங்கும் 2 பேட்டரிகள், ஒரு ஏ.சி. போன்றவை தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், உதவி பொது மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து சென்று தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தார்கள்.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சாமுண்டீஸ்வரி பதவி உயர்வு பெற்று காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2. காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்
காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
3. காஞ்சீபுரத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை - சத்து மாத்திரை வழங்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளிலும், பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடிகள் 27 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடிகள் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. காஞ்சீபுரம் நகரில் நவீன கருவி மூலம் கிருமி நாசினி தெளிப்பு
காஞ்சீபுரம் நகரில் நவீன கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.