மாவட்ட செய்திகள்

சீர்காழியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்பப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு + "||" + Will the ponds be filled with water to remove the encroachments on the dam? The expectation of the public

சீர்காழியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்பப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சீர்காழியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்பப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சீர்காழியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்பப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சீர்காழி,

சீர்காழி தென்பாதி ஈசானியத்தெரு, பிடாரி வடக்கு வீதி, தாடாளன்கோவில், கீழதென்பாதி, குளத்துமேட்டுத்தெரு, திருக்கோலக்கா, புளிச்சக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

இந்த குளங்கள் நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், மழை நீரை சேகரிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த நிலையில் முறையாக பராமரிக்காததாலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் கட்டப்பட்டதாலும் கடந்த சில ஆண்டுகளாக நகர் பகுதியில் உள்ள அரியாப்பிள்ளை குளம், திருவேங்கடம்பிள்ளை குளம், தாமரைக்குளம், பக்கிரி குட்டை குளம், அய்யனார்கோவில் குளம், கரிக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் வாய்க்கால்களில் செடி-கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. எனவே சீர்காழி நகர் பகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை சம்பந்தப்பட்ட துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடவடிக்கை

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக சீர்காழி நகர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆனாலும், நகர் பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாததால் குளங்கள் நிரம்பாமல் வறண்டு காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் உள்ள குளங்களுக்கு நீர் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
சேலத்தில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் தூண்டில் வளைவு பணியை விரைவாக முடிக்க கோரிக்கை
ஈத்தாமொழி அருகே பொழிக்கரை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைவாக முடிக்க கோரி பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. நீர்நிலைகளில் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்ப்பதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
காரிமங்கலம் அருகே நீர்நிலைகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் வளர்ப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. திருத்துறைப்பூண்டியில் கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருத்துறைப்பூண்டியில் கோவில் குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. பரங்கிப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
பரங்கிப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.