மாவட்ட செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது + "||" + Involved in robbery 2 people In the thug act Arrested

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு, 

ஈரோடு டவுன் போலீசார் கடந்த மாதம் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஈரோடு பெரியசேமூர் கொத்துக்காரர்தோட்டம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கத்தின் மகன் தமிழ் என்ற தமிழ்செல்வன் (வயது 26) பிடிபட்டார். அவர் மீது ஈரோடு வீரப்பன்சத்திரம், டவுன் குற்றப்பிரிவு, கருங்கல்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான தமிழ்செல்வன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் தமிழ்செல்வனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

இதேபோல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக மொடக்குறிச்சி லக்காபுரம் காளியம்மன் கோவில் நடுவீதியை சேர்ந்த செந்தில்குமார் (43) என்பவரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 24 வழக்குகள் உள்ளன. எனவே அவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் செந்தில்குமாரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தில் கைதான தமிழ்செல்வன், செந்தில்குமார் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி காந்திமார்க்கெட் அருகே பெண் பாலியல் பலாத்காரம் லாரி டிரைவர் கைது
திருச்சி காந்திமார்க்கெட் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
2. தளி அருகே இரு தரப்பினர் மோதல்: வாலிபர் அடித்துக் கொலை 4 பேர் கைது
தளி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. புதிய வீட்டில் குடியேறிய சிறிது நேரத்தில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை; வாலிபர் கைது
வேலூரில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண் குத்திக்கொலை ஜோதிடர் கைது
திருச்செங்கோடு அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.
5. நண்பர்களுடன் சேர்ந்து மனைவி கொன்று புதைப்பு: காணவில்லை என நாடகமாடிய கணவர் உள்பட 3 பேர் கைது
நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கொன்று புதைத்து விட்டு காணவில்லை என நாடகமாடிய கணவர் உள்பட 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.