மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது + "||" + The protest was held at Mayiladuthurai by the BJP in support of the demands

கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது

கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் நடந்தது
மயிலாடுதுறையில், கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், பா.ஜனதா கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் மோடிகண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முரளி, வார்டு தலைவர் சேகர், மாநில செயலாளர் ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தின்போது மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் தூக்கனாங்குளம் தென்கரையில் இருந்து தனியூர் செல்லும் வழியில் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டக்கூடாது. அந்த கழிவுகளை கொட்ட மாற்று இடம் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். வைரஸ் நோய்களை ஏற்படுத்தும் பன்றிகளை வளர்க்க மயிலாடுதுறை நகராட்சி தடை செய்ய வேண்டும்.

இறந்துபோன பன்றிகளை சாலையோரங்களில் வீசி செல்லாமல், அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மயிலாடுதுறையில் உள்ள 19, 21 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
திட்டச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரில் நின்று ஆர்ப்பாட்டம்
பூதலூர் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீரில் நின்றபடி மக்கள் உரிமை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. 2 மாத சம்பளம் வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
2 மாத சம்பளத்தை வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை