மாவட்ட செய்திகள்

கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு + "||" + In the cemetery, the Cauvery Disciplinary Committee examined

கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு

கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு
கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி,

காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் மற்றும் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழுவினர் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் தஞ்சை-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கல்லணைக்கு வந்து, மதகு பாலங்களை பார்வையிட்டனர்.

அப்போது கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகியவற்றுக்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும் முறை, அதன் மூலமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய பணிகள் குறித்து காவிரி ஒழுங்காற்று குழுவினரிடம் பொதுப்பணித்துறை காவிரி வடி நில கோட்ட தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆகியோர் விளக்கி கூறினர்.

வரவேற்பு

கல்லணைக்கு வந்த காவிரி ஒழுங்காற்று குழுவினரை செயற்பொறியாளர் ராஜன், கல்லணை உதவி பொறியாளர் ஆன்ட்டு ஆகியோர் வரவேற்றனர். கல்லணையை ஆய்வு செய்த பின்னர் குழுவினர் அங்கிருந்து முக்கொம்பு அணைக்கு புறப்பட்டு சென்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மண்ணிவாக்கம் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
மண்ணிவாக்கம் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு.
2. நாளை முதல் மும்பையில் மீண்டும் ஒருவாரம் மழை வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பையில் நாளை அல்லது நாளை மறுநாள் முதல் ஒரு வாரம் மீண்டும் பருவமழை தீவிரமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
3. ஓட்டப்பிடாரத்தில் பாலம் அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொம்பாடி தளவாய்புரத்தில் கொம்பாடி அணையின் குறுக்கே ரூ.4 கோடியே 20 லட்சம் செலவில் புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
4. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு: கிராமங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கிராமங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும் என்று விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.
5. ஏற்காட்டில் கலெக்டர் ராமன் ஆய்வு
ஏற்காட்டில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...