மாவட்ட செய்திகள்

பலத்த மழையால் கோரையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது + "||" + Heavy rains cause water to flood into the Koraiyaru Falls

பலத்த மழையால் கோரையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

பலத்த மழையால் கோரையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.
அரியலூர்,

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பெய்த மழையால் கோட்டைக்காட்டிற்கும், கடலூர் மாவட்டம் ஆவினன் குடிக்கும் இடையே செல்லும் வெள்ளாற்றில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் 2 மாவட்டத்திற்கும் இடையேயான போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. பலத்த மழைக்கு பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கோரையாறு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அந்த அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

திருமானூர்-3, ஜெயங்கொண்டம்-12, செந்துறை-1.2.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பெரம்பலூர்-11, செட்டிகுளம்-24, பாடாலூர்-43, அகரம்சீகூர்-38, லப்பைகுடிக் காடு-15, புதுவேட்டக்குடி-18, எறையூர்-22, கிருஷ்ணாபுரம்-20, தழுதாழை-24, வி.களத்தூர்-7, வேப்பந்தட்டை -12.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 14 சதவீதம் மழை குறைவு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட மழை 14 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. நாகையில் பலத்த மழை: குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நின்றதால் துர்நாற்றம்
நாகையில் பலத்த மழை பெய்ததால் குடியிருப்பு பகுதியில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
3. சென்னையில் சில இடங்களில் பரவலாக மழை
சென்னையில் இன்று காலை சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
4. நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம்
நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.
5. கொரடாச்சேரி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் சாவு
கொரடாச்சேரி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.