மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில், மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி + "||" + In Thoothukudi, an electrician struck and killed an engineer

தூத்துக்குடியில், மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி

தூத்துக்குடியில், மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி
தூத்துக்குடியில் தங்கி வேலைக்காக பயிற்சி மையத்தில் படித்து வந்த என்ஜினீயர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.
தூத்துக்குடி, 

சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனி தூவங்கள் கிராமத்தை சேர்ந்த காந்தி மகன் பிரபு தேவா (வயது 23). என்ஜினீயரான இவர் வேலைக்காக தூத்துக்குடி மேலசண்முகபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் கடந்த 6 மாதங்களாக தங்கி இருந்து, ஒரு தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் இவர் அந்த வீட்டில் மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதத்தில் மின்சாரம் தாக்கி பிரபுதேவா தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கொண்டு சென்ற சிறிது நேரத்திலேயே பிரபுதேவா பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.