மாவட்ட செய்திகள்

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்படும் ஆழ்துளை கிணறுகள் + "||" + Deep wells that are converted into rainwater harvesting centers in the Tanjore Municipality

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்படும் ஆழ்துளை கிணறுகள்

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்படும் ஆழ்துளை கிணறுகள்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டு வருகிறது. 45 ஆழ்துளை கிணறுகளில் 15-ல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தஞ்சாவூர்,

தஞ்சை நகராட்சி 1866-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் 1983-ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று 2013-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2014-ம் ஆண்டு தஞ்சை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளை சேர்ந்த மக்களுக்கு திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் பள்ளிஅக்ரகாரத்தில் உள்ள வெண்ணாற்றில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆழ்துளை கிணறுகள்

இது தவிர கோடை காலங்களில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் மோட்டார் பொருத்தியும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக 51 வார்டுகளிலும் சாலை ஓரங்கள் மற்றும் முக்கிய தெருக்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டன. அவ்வாறு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் தற்போது 472 கிணறுகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் இருந்து தற்போதும் தண்ணீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பயன்பாடு இல்லை

45 ஆழ்துளை கிணறுகள் பயன்பாடு அற்ற நிலையில் உள்ளது. ஆரம்ப காலத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் குறைந்த அடி ஆழம் மட்டுமே போடப்பட்டது. ஆனால் தற்போது 300 அடிக்கும் கீழே தண்ணீர் உள்ளதால் ஆழ்துளை கிணறு 400 அடிக்கும் மேல் போடப்படுகிறது. ஆழம் குறைவாக போடப்பட்ட இடங்களில் மீண்டும் ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டு உள்ளன.

அவ்வாறு போடப்பட்டும் தண்ணீர் இல்லாமல் 45 கிணறுகள் உள்ளன. இந்த நிலையில் திருச்சியை அடுத்த மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து குழந்தை இறந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட அரசு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழைநீர் சேகரிப்பு மையம்

அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 45 ஆழ்துளை கிணறுகள் தற்போது இரும்பு மூடிகொண்டு மூடப்பட்டு உள்ளன. மேலும் இந்த ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டாலும் இதனை மழைநீர் சேகரிப்பு மையமாகவும் மாற்றம் செய்து வருகிறார்கள். தற்போது வரை 15 கிணறுகள் மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடி அதனை மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றி வருகிறோம். வீடுகள் மற்றும் சாலைகளில் மழைகாலங்களில் பெய்யும் நீரை குழாய்கள் மூலம் இந்த ஆழ்துளை கிணறுகளில் சேமிக்கும் வகையில் கட்டப்பட்டு வருகின்றன.

நீர் மட்டம் உயரும்

இதுவரை 15 இடங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கரந்தை, சேவப்பநாயக்கன்வாடி, கோட்டை பகுதி, கீழவாசல் உள்ளிட்ட இடங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், இதன் அருகில் உள்ள மற்ற ஆழ்துளை கிணறுகளிலும் நீர் மட்டம் உயரும்”என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சையில் தொடர்மழையால் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டும், மீன்களை விட்டும் பொதுமக்கள் போராட்டம்
தஞ்சையில் தொடர்மழையால் சேறும், சகதியுமான சாலையில் பொதுமக்கள் நாற்றுகளை நட்டும், மீன்களை விட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழப்பு
தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
3. தஞ்சை பெரியகோவில் முகப்பு பகுதியில் கிடப்பில் போடப்பட்ட கோட்டைச்சுவர் பலப்படுத்தும் பணி மீண்டும் தொடக்கம்
தஞ்சை பெரியகோவில் முகப்பு பகுதியில் கிடப்பில் போடப்பட்ட கோட்டைச்சுவர் பலப்படுத்தும் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது. கருங்கல், செம்மரக்கல் கொண்டு பணிகள் தொடங்கி உள்ளது.
4. தஞ்சை மாவட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கிய குடிமகன்கள் - டோக்கன் மூலம் மட்டுமே வினியோகம்
தஞ்சை மாவட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். டோக்கன் மூலம் மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
5. தஞ்சை மாவட்டத்தில் ரூ.7½ கோடியில் கல்லணை கால்வாய் தூர்வாரும் பணிகள் தொடக்கம்
தஞ்சை மாவட்டத்தில், ரூ.7 கோடியே 53 லட்சம் மதிப்பில் கல்லணை கால்வாயில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.