மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் + "||" + Camp on awareness of the necessity of wearing a helmet

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி தேளூர் பிரிவு பாதையில் கயர்லாபாத் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி தேளூர் பிரிவு பாதையில் கயர்லாபாத் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் முன்னிலை வகித்தார். முகாமில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்லக்கூடாது. குடித்து வாகனம் ஓட்டக் கூடாது. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இம்மாத இறுதியில் கொரோனாவுக்கு 6 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
இம்மாத இறுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
2. வேலூர் பழைய பஸ்நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம்
வேலூர் மாநகராட்சி சார்பில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.
3. நெல்லையில் கொரோனா விழிப்புணர்வு கலைக்குழு பிரசாரம்
கொரோனா விழிப்புணர்வு கலைக்குழு பிரசாரத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம் தொடங்கி வைத்தார்.
4. கூடலூர் அருகே கிராமங்களுக்குள் முகாமிடும் காட்டுயானை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை
கூடலூர் அருகே கிராமங்களுக்குள் முகாமிடும் காட்டுயானையை விரட்டியடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
5. சின்னசேலம் பகுதியில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
சின்னசேலம் பகுதியில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்.