மாவட்ட செய்திகள்

சரவணம்பட்டியில் துணிகரம் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு + "||" + Venture Sub-Inspector at Saravanampatti 10 Home Jewelry Theft

சரவணம்பட்டியில் துணிகரம் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

சரவணம்பட்டியில் துணிகரம் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
கோவை சரவணம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சரவணம்பட்டி,

கோவையை அடுத்த சரவணம்பட்டி நேரு நகர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 54). இவர் சத்தியமங்கலம் அதிவிரைவுப்படை சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி, மகன் பிரதீப் ஆகியோர் சரவணம்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு லோகேஸ்வரியும், பிரதீப்பும் வீட்டை பூட்டிவிட்டு காந்திபுரத்திற்கு சென்றுவிட்டு பகல் 1 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.

10 பவுன் நகை திருட்டு

அப்போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பொருட் கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 2 செயின், கம்மல் உள்பட 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு லோகேஸ்வரி தகவல் கொடுத்தார்.இதையடுத்து, போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அதனைதொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நிலையில்அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை சரவணம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 10 பவுன் நகையை திருடிசென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் ஆயுதங்களால் தாக்கி லாரி கிளனர் கொலை மனைவியின் 2-வது கணவருக்கு வலைவீச்சு
பெங்களூருவில் ஆயுதங்களால் தாக்கி லாரி கிளனர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவியின் 2-வது கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
2. கோவில்பட்டியில் பயங்கரம்: பெயிண்டர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெயிண்டரை வழிமறித்து ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. திருப்பூரில் ஜவுளிக்கடைக்காரர் வீட்டில் திருடிய 2 பேர் கைது
திருப்பூரில் ஜவுளிக்கடைக்காரர் வீட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
4. ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி 2 மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நெல்லிக்குப்பம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...