மாவட்ட செய்திகள்

சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டு உறவினர் வீட்டில் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + Superintendent of police in Salem home The web of jewelry-theft mystery figures

சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டு உறவினர் வீட்டில் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டு உறவினர் வீட்டில் நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டு உறவினர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது. இதில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேலம்,

சேலம் நரசோதிப்பட்டி ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 70). இவருடைய மனைவி லட்சுமி. கடந்த 1-ந் தேதி இவர்கள் வீட்டை பூட்டி விட்டு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவைக்கு சென்றனர். இந்தநிலையில் நேற்று காலை சின்னசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து இருப்பதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்தனர்.

இதுகுறித்து அவர்கள் கோவையில் உள்ள சின்னசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 10 பவுன் தங்க காசு மற்றும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் வீட்டில் இருந்த விலை உயர்ந்த டி.வி.யும் திருட்டு போனது.

போலீசார் விசாரணை

இதுதொடர்பாக சின்னசாமி சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சின்னசாமி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி, தற்போது புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்ட அருண் சக்தி குமார் மற்றும் ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் ஆகியோரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசத்தில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெங்காயம் திருட்டப்பட்டதாக விவசாயி புகார்
மத்தியப் பிரதேசத்தில் 30,000 ரூபாய் மதிப்புள்ள வெங்காயம் திருடப்பட்டதாக விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
2. மார்த்தாண்டத்தில் 2 கடைகளில் 10 லேப்-டாப்கள், பணம் திருட்டு ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
மார்த்தாண்டத்தில் 2 கடைகளில் லேப்-டாப்கள், பணம் திருடப்பட்டது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. கொரடாச்சேரி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு
கொரடாச்சேரி அருகே ரூ 1 கோடி மதிப்பிலான ஐம்பொன் அம்மன் சிலையை யாரோ மர்ம மனிதர்கள் திருடிச்சென்று விட்டனர்.
4. பெரம்பலூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலி: பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
பெரம்பலூரில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்கள் எதிரொலியாக, திருட்டை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
5. சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருட்டு
சமயபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் துணிகளையும் அள்ளிச் சென்றனர்.