மாவட்ட செய்திகள்

மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு + "||" + Inspection of the Deputy Director of Agriculture for Spraying Drugs in Maize

மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு

மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு
பெரியநாகலூரில் மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு.
அரியலூர்,

அரியலூர் மாவட்டம், பெரியநாகலூர் கிராமத்தில் உள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்பு பணி உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் நடைபெற்றது. இந்த பணியை அரியலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் 20 நாள் முதல் 45 நாட்கள் வரை உள்ள மக்காச்சோள பயிர்களுக்கு மட்டும் மருந்து தெளிப்பு பணி நடைபெறும் என்றார். மேலும் பெரிய நாகலூர் கிராமத்தில் 20 எக்டர் பரப்பரளவில் அனைத்து பகுதிகளிலும் மருந்து தெளிக்கும் பணி விரைந்து முடித்திட உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு வேளாண்மை இணை இயக்குனர் அறிவுறுத்தினார். தொடர்ந்து மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் முறைகள் பற்றி வேளாண்மை அலுவலர் சவீதா எடுத்துரைத்தார். அப்போது வேளாண்மை உதவி அலுவலர்கள் வேல்முருகன், சுப்பிரமணியன், ராஜாகிரி, ஸ்ரீதேவி ஆகியோர் உடனிருந்தனார். இதே போல் அருங்கால், சிறுவளூர், அரியலூர் வடக்கு ஆகிய கிராமங்களில் மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்பு பணி நடைபெற்று வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நாளை முதல் மும்பையில் மீண்டும் ஒருவாரம் மழை வானிலை ஆய்வு மையம் தகவல்
மும்பையில் நாளை அல்லது நாளை மறுநாள் முதல் ஒரு வாரம் மீண்டும் பருவமழை தீவிரமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2. ஓட்டப்பிடாரத்தில் பாலம் அமைக்கும் பணியை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொம்பாடி தளவாய்புரத்தில் கொம்பாடி அணையின் குறுக்கே ரூ.4 கோடியே 20 லட்சம் செலவில் புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
3. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு: கிராமங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
கிராமங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும் என்று விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.
4. ஏற்காட்டில் கலெக்டர் ராமன் ஆய்வு
ஏற்காட்டில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
5. களக்காடு அருகே பழுதடைந்த பாலத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. ஆய்வு
களக்காடு அருகே பழுதடைந்த பாலத்தை ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ. ஆய்வு.