மாவட்ட செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2,602 பேர் எழுதினர் + "||" + SSLC 2,602 students wrote the National Review Examination for Students

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2,602 பேர் எழுதினர்

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2,602 பேர் எழுதினர்
கரூரில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வினை 2,602 பேர் எழுதினர்.
கரூர்,

ஏழை-எளிய பள்ளி மாணவ, மாணவிகளின் ஆற்றலை கண்டறிந்து அவர்களது கல்விக்கு உதவும் பொருட்டு ஊக்கத்தொகை வழங்குவதற்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில் கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 9 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. இதனை எழுதுவதற்காக 2,782 பேர் பதிவு செய்திருந்தனர். எனினும் இந்த தேர்வினை 2,602 பேர் கலந்து கொண்டு எழுதினர். 180 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அதிகாரிகள் ஆய்வு

கரூர் மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன் உள்பட கல்வி அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? தேர்வெழுதுவதில் மாணவர்களுக்கு ஏதும் வசதி குறைபாடு இருக்கிறதா? என்பன உள்ளிட்ட கோணங்களில் மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கரூர் கல்வி மாவட்டத்தில் 7 மையங்களிலும், குளித்தலை கல்வி மாவட்டத்தில் 2 மையங்களிலும் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


தொடர்புடைய செய்திகள்

1. செமஸ்டர் தேர்வு கட்டணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும்!
தொழில்நுட்பம் என்பது நமது அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கும் புதிய மொழியாக கருதப்படுகிறது. அந்தவகையில், தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் என்ஜினீயரிங் படிப்பு என்பது 45 விதமான படிப்புகளை படிப்பது மட்டுமல்ல, அறிவார்ந்த வாழ்க்கை நெறி சார்ந்த படிப்புகளாகவும் கருதப்படுகிறது.
2. கர்நாடகத்தில் இன்று தொடங்குகிறது என்ஜினீயரிங் உள்பட தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு
என்ஜினீயரிங் உள்பட தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 1.90 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
3. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்!
பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மீது அதிக அன்பு கொண்டவர். தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தாலும், அவர் தனது பேச்சின் தொடக்கத்திலும், இறுதியிலும் வணக்கம், நன்றி என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசுவதும் உண்டு.
4. விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 86.98 சதவீதம் தேர்ச்சி
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 86.98 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 1.13 சதவீதம் கூடுதலான தேர்ச்சியாகும்.
5. பிளஸ்-2 தேர்வு: திருவாரூர் மாவட்டத்தில் 88 சதவீதம் பேர் தேர்ச்சி மாணவர்களை விட மாணவிகளே அதிகம்
திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 88.45 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட 1.93 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்தனர்.