மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில், துப்பாக்கிகள் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் + "||" + Thoothukudi District, Guns can apply for renewal

தூத்துக்குடி மாவட்டத்தில், துப்பாக்கிகள் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், துப்பாக்கிகள் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் துப்பாக்கிகள் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;-
தூத்துக்குடி,

படைக்கல உரிமத்தின் செயல்திறன் வருகிற டிசம்பர் 31-ந் தேதியோடு முடிவடைகிறது.

எனவே படைக்கல உரிமையாளர்கள் தங்களது ஒற்றைக்குழல், இரட்டைக்குழல் துப்பாக்கி, எஸ்.பி.எம்.எல்., டி.பி.எம்.எல்., ரைபிள், ரிவால்வர் மற்றும் பிஸ்டல் உரிமங்களை 1.1.2020 முதல் 3 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்குள், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நடுவருக்கு, மனுக்களை அசல் உரிமத்துடன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

புதுப்பிக்கும் படைக்கல சட்ட உரிமத்திற்கு கட்டண தொகையினை 0055 po-l-i-ce re-c-e-ipts und-er arms act state ( d.p.c. 0055 00104 ab 0007 என்ற தலைப்பில் ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கி கிளையில் செலுத்தி விண்ணப்பத்தில் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டி, விண்ணப்பத்தோடு உரிமம், அசல் செலுத்துச்சீட்டுடன் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும்.

பிஸ்டல், ரிவால்வர் ஆகியவற்றை புதுபிக்க ரூ.1,500 கட்டணம் செலுத்த வேண்டும். சென்டர் பயர் ரைபிள் புதுபிக்க ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் .22 போர் ரைபிள் மற்றும் தோட்டா ரக துப்பாக்கிகள் புதுப்பிக்க ரூ.1,500-ம், நிரப்பு ரக துப்பபாக்கி, பிரீச் லோடிங் சென்டர் பையர் ரைபிள் புதுப்பிக்க ரூ.1,500-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.

துப்பாக்கி உரிமத்தின் செயல்திறன் டிசம்பர் 31-ந் தேதியுடன் முடிவடையும் துப்பாக்கி உரிமையாளர்கள், தங்களது உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க தவறினால் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று தங்களிடம் உள்ள துப்பாக்கியை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

கொடுக்க தவறினால், படைக்கல சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பருவமழை தாக்கத்தில் இருந்து நெற்பயிரை பாதுகாப்பது எப்படி? - கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை தாக்கத்தில் இருந்து நெற்பயிரை பாதுகாக்க, வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ள நடவடிக்கைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலோசனை கூறி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2. மாணவர்களுக்கு நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் - கலெக்டர் சந்தீப்நந்தூரி பேச்சு
மாணவர்களுக்கு கல்வியுடன் நற்பண்புகளையும் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி பேசினார்.
3. பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்க்க மானியம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்க்க மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. தூத்துக்குடி மாவட்டத்தில், 505 குளங்களை தூர்வார நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 505 குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5. மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
மத்திய அரசின் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-