மாவட்ட செய்திகள்

சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு + "||" + Opening of water from Cholavaram Lake to Pulchel Lake for Chennai Drinking Water

சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
செங்குன்றம்,

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் உள்ளன.

இதில் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரப்படி 233 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. மேலும் இந்த ஏரிக்கு 160 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சோழவரம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சோழவரம் ஏரியில் மொத்தம் 10 மதகுகள் உள்ள நிலையில், அங்கு 4 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரிக்கு திறப்பு

தற்போது சோழவரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து சென்னை குடிநீரின் தேவைக்காக புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 100 கன அடிநீர் திறக்கப்படுகிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். தற்போது தண்ணீர் இருப்பு 932 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக அங்கு இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னைக்கு தண்ணீர் கிடைக்குமா?: கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம் - ஐதராபாத்தில் இன்று நடக்கிறது
ஐதராபாத்தில் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம் இன்று நடக்கிறது.
2. கொரோனா வைரஸ் எதிரொலி: அரசு மருத்துவமனையில் தனி வார்டு திறப்பு
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு தனி வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன.
3. டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா அறிவித்துள்ளார்.
4. வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
5. வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு 6-ந் தேதி நடக்கிறது
குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதி நடக்கிறது.