மாவட்ட செய்திகள்

11 பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளர் கைது + "||" + 11 warrant issued Film producer arrested

11 பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளர் கைது

11 பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்ட சினிமா தயாரிப்பாளர் கைது
இந்தி பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் தபூன் சுத்ரதர்(வயது 64). இவர் ஒருவரிடம் இருந்து பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்கப்போவதாக ஆசைவார்த்தை கூறி பெரிய தொகையை கடனாக பெற்றார்.
மும்பை, 

தபூன் சுத்ரதர் கூறியபடி படம் எதுவும் எடுக்கவில்லை. மேலும் கடன் வழங்கியவர் பணத்தை திரும்ப கேட்டபோதும் அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். பின்னர் ஒரு வழியாக வாங்கிய கடனை அவர் பல்வேறு காசோலைகளாக கொடுத்ததாக தெரிகிறது. இருப்பினும் அவை அனைத்தும் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர், பாந்திரா கோர்ட்டில் தனிதனியே 11 வழக்குகளை தாக்கல் செய்தார்.

இது அனைத்திலும் கோர்ட்டு அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத 11 பிடி வாரண்டை பிறப்பித்தது. இருப்பினும் போலீசார் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிவந்த சினிமா தயாரிப்பாளரை நேற்று போலீசார் கைது செய்தனர்.