மாவட்ட செய்திகள்

வேளாண் கல்லூரி வார்டனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் சிறையில் அடைப்பு + "||" + Student arrested for murdering agricultural college warden

வேளாண் கல்லூரி வார்டனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் சிறையில் அடைப்பு

வேளாண் கல்லூரி வார்டனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் சிறையில் அடைப்பு
வேளாண் கல்லூரி வார்டனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் சிறையில் அடைப்பு.
தா.பேட்டை,

திருச்சியை அடுத்த துறையூர் அருகே கண்ணனூரில் இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் விடுதியில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 45) வார்டனாக வேலை செய்து வந்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த அப்துல்ஹக்கீம் (19) என்ற மாணவர் கல்லூரி விடுதியில் தங்கி பி.எஸ்சி. வேளாண்மை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் அப்துல்ஹக்கீம் சரியாக படிக்காமல், 8 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். அதுபற்றி அவருடைய பெற்றோருக்கு விடுதி வார்டன் தகவல் தெரிவித்துள்ளார். உடனே மாணவரின் தந்தை அப்துல்ரசாக் கல்லூரிக்கு வந்து தனது மகனை கண்டித்ததுடன், அதன் பிறகு தனது மகனிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர், நேற்று முன்தினம் வார்டன் வெங்கட்ராமனை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ஹக்கீமை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், அவர் துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன்: சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் கொலை வாலிபர் கைது
திருவொற்றியூர் கடற்கரையில் பிணமாக கிடந்தவர் வழிப்பறி கொள்ளையன் என தெரிந்தது. சம்பந்தமே இல்லாமல் போலீசில் மாட்டிவிட்டதால் அவரை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. தூத்துக்குடியில் பயங்கரம்: காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது
தூத்துக்குடியில் காதல் மனைவி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகத்தால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.
3. சுங்குவார்சத்திரம் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை பெயிண்டர் கைது
சுங்குவார் சத்திரம் அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளியை கொலை செய்ததாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
4. நெல்லை அருகே லாரி டிரைவர் கொலை: என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது
நெல்லை அருகே லாரி டிரைவர் கொலையில் என்ஜினீயர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. உணவில் விஷம் கலந்து கொடுத்தும் சாகாததால் துப்பட்டாவால் கணவரின் கழுத்தை நெரித்து கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
உணவில் விஷம் கலந்து கொடுத்தும் சாகாததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து துப்பட்டாவால் கணவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்தனர்.