மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Cops spy on woman with 5-pound tali chain

பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கறம்பக்குடி அருகே பட்டபகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன்விடுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராமன். இவரது மனைவி யோகேஸ்வரி (வயது 29). இவர் நேற்று மதியம் அவரது வீட்டிற்கு வந்த தாயை வழி அனுப்புதற்காக நைனான்கொல்லை பிரிவு சாலையில் தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், யோகேஸ்வரி மற்றும் அவரது தாயின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி, திடீரென யோகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து யோகேஸ்வரி மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்று மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டபகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிசங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாயை கொன்று மூதாட்டியிடம் கவரிங் நகைகள் பறிப்பு கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
வி.கைகாட்டி அருகே நாயை கொன்று மூதாட்டியிடம் கவரிங் நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. நோயை குணமாக்குவதாக கூறி நூதன முறையில் தங்க நகைகள் பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
நோயை குணமாக்குவதாக கூறி நூதன முறையில் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. கரூரில் துணிகரம்: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு
கரூரில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. வீடுபுகுந்து அக்காள்- தங்கையிடம் அரிவாளை காட்டி மிரட்டி 8½ பவுன் சங்கிலி பறிப்பு
ஒரத்தநாடு அருகே வீடு புகுந்து அக்காள்-தங்கையிடம் அரிவாளை காட்டி மிரட்டி 8½ பவுன் சங்கிலியை டவுசர் கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
5. திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிகளை போலீசார் தேடுகிறார்கள்
திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.