மாவட்ட செய்திகள்

கிரானைட் குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது + "||" + Obtaining Environmental Permit for Granite Quarry Public Hearing Meeting The collector took the helm

கிரானைட் குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

கிரானைட் குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
கிரானைட் குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் கே.எஸ். கந்தசாமி தலைமையில் நடந்தது.
போளூர், 

போளூர் தாலுகா செங்குணம் கிராமத்தில் அமைய உள்ள கிரானைட் குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று போளூர் ஆர்.குண்ணத்தூர் கூட்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். சென்னை தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் துணை மேலாளர்கள் கணேசன் (சுரங்கம்), விஜயகுமார் (சுற்றுச்சூழல்), விழுப்புரம் கோட்ட மேலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுற்றுச்சூழல் உதவிப் பொறியாளர் சுஹாஷினி வரவேற்றார்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. கூட்டம் முடிந்தவுடன் கலெக்டர் கந்தசாமி செங்குணம் கிராமத்தில் கிரானைட் குவாரி அமைய உள்ள இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.