மாவட்ட செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் போராட்டம் - டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. பேட்டி + "||" + For sugarcane farmers If no outstanding amount is paid Struggle

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் போராட்டம் - டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. பேட்டி

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் போராட்டம் - டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. பேட்டி
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,

புதுவை லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2017-ம் ஆண்டு தடையை மீறி விவசாயிகள் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக விவசாயிகள் 8 பேர் மீது காட்டேரிக்குப்பம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதன்பேரில் விவசாயிகள் 8 பேரும் நேற்று புதுவை கோர்ட்டில் ஆஜரானார்கள். இதுகுறித்து விசாரித்த கோர்ட்டு வருகிற 26-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் வழக்கை வாபஸ் பெறக்கோரியும், நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் கோர்ட்டு முன்பு டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்த முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதி இன்றி போராட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. வெட்டி அனுப்பிய கரும்புக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதைக்கேட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையில் வழக்கு போடமாட்டோம் என்று கூறிவிட்டு 8 விவசாயிகள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது நம்பிக்கை துரோகம். உடனடியாக இந்த வழக்கை அரசு வாபஸ் பெற வேண்டும். விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி மாநிலம் அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.