மாவட்ட செய்திகள்

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு, புதுவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு + "||" + Ayodhya case verdict today, Strong police security throughout the city

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு, புதுவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு, புதுவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்று(சனிக்கிழமை) தீர்ப்பு கூறப்பட உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி,

அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்மி பூமி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்று(சனிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது. எனவே நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தியது.

அதனை தொடர்ந்து புதுவை போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீசார், பொதுமக்களுடன் நல்லுறவு கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் அயோத்தி தீர்ப்பின் போது பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ யாரும் வெளிப்படுத்தக்கூடாது. யாரும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடக்கூடாது. தீர்ப்புக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ சமூக வலைதளங்களில் யாரும் கருத்துகள் வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதுவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. ஆயுதம் தாக்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ் நிலையத்தில் வெளியூரிலிருந்து பஸ் மூலம் வந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். புதுவை முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது இருந்தால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இன்று(சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி வழக்கு - அறநிலையத்துறை பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், அர்ச்சகர்கள், ஓதுவார்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் தலா ரூ.15 ஆயிரம் வழங்க கோரி ‘தினமலர்’ வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி தொடர்ந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளை யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்
3. 5 நாட்கள் விசாரிக்க கோர்ட்டு அனுமதி: கூட்டாளியுடன் காசியை காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்
காசி, அவரது கூட்டாளியை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
4. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்குகிறது
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி நாளை தொடங்க உள்ளது.
5. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.