மாவட்ட செய்திகள்

பா.ஜனதா, சிவசேனா இடையே முதல்-மந்திரி பதவியை பகிர்வது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - நிதின் கட்காரி பேட்டி + "||" + No agreement on sharing of post of first minister between BJP and Shiv Sena - Interview with Nitin Gadkari

பா.ஜனதா, சிவசேனா இடையே முதல்-மந்திரி பதவியை பகிர்வது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - நிதின் கட்காரி பேட்டி

பா.ஜனதா, சிவசேனா இடையே முதல்-மந்திரி பதவியை பகிர்வது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - நிதின் கட்காரி பேட்டி
பா.ஜனதா, சிவசேனா இடையே முதல்-மந்திரி பதவியை பகிர்வது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மும்பை, 

மராட்டியத்தில் ஆட்சியமைக்கும் பிரச்சினையில் பாரதீய ஜனதா அனுமதித்தால் மத்திய மந்திரி நிதின் கட்காரி 2 மணி நேரத்தில் தீர்வு காண்பார் என சிவசேனா பிரமுகர் ஒருவர் தெரிவித்து இருந்தார். இந்த பரபரப்பான சூழலில் நேற்று நிதின் கட்காரி மும்பை வந்திருந்தார். அவர் பாந்திரா மாதோஸ்ரீ இல்லத்தில் உத்தவ் தாக்கரேயை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியா னது. ஆனால் இதை சிவசேனா மறுத்து விட்டது.

இந்தநிலையில், மும்பையில் நிதின்கட்காரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னுடைய தகவல்படி பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாகவோ, ஆட்சியில் சமபங்கு குறித்தோ எந்தவொரு ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை. மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே கூட, எந்த கட்சி அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கிறதோ அந்த கட்சிக்கு தான் முதல்-மந்திரி பதவி என கூறியிருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல- மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல, அது செயற்கையாக உருவாக்கபட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.