மாவட்ட செய்திகள்

காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது + "||" + Youth arrested for seizing 1,920 liquor bars

காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது

காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
நாகூர் அருகே காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.
நாகூர்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு மதுபானங்கள் கடத்தி வரப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தமிழக எல்லையான நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

கார் பறிமுதல்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை விரட்டி சென்று கிழக்கு கடற்கரை சாலை பிரிவில் உள்ள மேல நாகூர் அருகே மடக்கி பிடித்தனர். அப்போது காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் மேலவாஞ்சூர் ஆசாரி தெருவை சேர்ந்த சிலம்பரசன் (வயது 30) என்பவர் காரில் திருத்துறைப்பூண்டிக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட 1,920 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ. 10 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருத்தணி அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண் கொலை 2 பேர் கைது
திருத்தணி அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய ஊராட்சி மன்ற தலைவர் கைது
கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய ஊராட்சிமன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
3. திருத்தணி அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண் கொலை 2 பேர் கைது
திருத்தணி அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. செல்போன் எண்ணுடன் கல்லூரி மாணவி பெயரில் ஆபாச முகநூல் கணக்கு என்ஜினீயர் கைது
தன்னுடன் பேச மறுத்ததால் கல்லூரி மாணவியின் பெயரில் போலியாக ஆபாச முகநூல் கணக்கு தொடங்கி அவதூறு பரப்பியதாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
5. திருவொற்றியூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி மதிப்பீட்டாளர் கைது
திருவொற்றியூரில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி மதிப்பீட்டாளர் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...