மாவட்ட செய்திகள்

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி + "||" + Congress honors Supreme Court verdict in Ayodhya case

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேட்டி
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது என்று அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.
திருச்சி,

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை காக்கவும், அமைதி நிலவவும், நாட்டின் ஒற்றுமைக்கும் அனைத்து தரப்பினருக்கும் பொறுப்புள்ளது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது கண்டனத்துக்குரியது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை காட்டுகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் பாதுகாப்புக்கு ஏதேனும் பாதகம் வந்தால் மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு பொதுமக்களிடையே ஆதரவு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக காங்கிரஸ் தலைமை தயாராகி வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊழல், கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறினார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகும் கருப்பு பணம் அதிகரித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.பி., திருச்சி மாவட்ட தலைவர்கள் ஜவகர் (மாநகர்), கோவிந்தராஜ் (தெற்கு), கலை (வடக்கு) மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாலக்கரை ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியானதையொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 11 இடங்களில் சோதனை சாவடி கலெக்டர் ரத்னா பேட்டி
அரியலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
2. குற்றவாளிகள் நாளை காலை தூக்கில் இடப்படுவார்கள்; நிர்பயா வழக்கறிஞர் பேட்டி
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனைக்கு தடை கோரிய குற்றவாளிகளின் மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
3. மின்வாரியத்தில், முதற்கட்டமாக கேங் மேன் பணிக்கு 5 ஆயிரம் பேர் தேர்வு அமைச்சர் தங்கமணி பேட்டி
மின்வாரியத்தில் கேங் மேன் பணிக்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
4. குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான பிரசாரம்
குடியுரிமை திருத்த சட்டத்தால் நாட்டை விட்டு இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான பிரசாரம் என காதர் மொகிதீன் கூறினார்.
5. மக்களுக்கு நல்லது செய்ய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் முன்னாள் இந்திய அழகி அனுகீர்த்திவாஸ் பேட்டி
மக்களுக்கு நல்லது செய்ய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று முன்னாள் இந்திய அழகி அனுகீர்த்திவாஸ் தெரிவித்தார்.