மாவட்ட செய்திகள்

புதிய பஸ் நிலையம் எதிரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூட வேண்டும் பெண்கள், கலெக்டரிடம் மனு + "||" + Newly opened bar opposite the new bus station

புதிய பஸ் நிலையம் எதிரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூட வேண்டும் பெண்கள், கலெக்டரிடம் மனு

புதிய பஸ் நிலையம் எதிரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூட வேண்டும் பெண்கள், கலெக்டரிடம் மனு
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூட வேண்டும் என்று பெண்கள், கலெக்டர் பிரபாகரிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,

எங்கள் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் அன்றாடம் கூலி, விவசாய கூலி செய்து வாழ்ந்து வருகிறோம். மேலும் எங்கள் பெண் குழந்தைகள் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அதிக அளவில் சென்று வருகின்றனர். அதே போல் இப்பகுதியை சேர்ந்த பெண்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

மூட வேண்டும்

இந்த நிலையில் தற்போது புதிய பஸ் நிலையம் எதிரில் புதிதாக மதுக்கடை திறந்துள்ளனர். இதனால் மது குடிப்பவர்கள் குடித்துவிட்டு, எங்கள் பகுதியை சேர்ந்தவர்களிடம் சண்டை போடுகின்றனர். பெண்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரிக்கும், பள்ளிகளுக்கும் செல்லும் பெண் குழந்தைகள் பயந்தவாறு சென்று வருகின்றனர். இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.

எனவே, எங்கள் பகுதி பொதுமக்கள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி மதுக்கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசுக்கு ரூ.1½ லட்சம் கோடி பாக்கி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஏர்டெல், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், உரிம கட்டணமாக ரூ.92 ஆயிரம் கோடியும், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமாக ரூ.55 ஆயிரம் கோடியும் மத்திய அரசுக்கு பாக்கி வைத்துள்ளன.
2. காரமூலா கிராமத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் - கலெக்டரிடம் ஆதிவாசி மக்கள் மனு
காரமூலா கிராமத்தில் தார்சாலை அமைக்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
3. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஜனநாயக முறையில் நேர்மையாக நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
4. சூதாட்ட விடுதிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது கவர்னர் கிரண்பெடியிடம் பா.ஜனதா மனு
புதுவையில் சூதாட்ட விடுதிகள் தொடங்க அனுமதி அளிக்கக் கூடாது என்று கவர்னர் கிரண்பெடியிடம் பாரதீய ஜனதா கூட்டணியினர் மனு அளித்தனர்.
5. நெல்லை கண்ணன் மீது போலீஸ் கமி‌‌ஷனரிடம் அ.தி.மு.க.வினர் புகார் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் நெல்லை மாநகர போலீஸ் கமி‌‌ஷனரிடம் புகார் மனு கொடுத்தனர். திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.