மாவட்ட செய்திகள்

நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி + "||" + Incident while visiting a friend's funeral: Doctor kills after falling off motorbike

நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி

நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி
நண்பரின் இறுதி சடங்கில் பங்கேற்ற டாக்டர், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி,

கொசப்பாளையம் திருமால் நகரை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன் கில்பர்ட் ரீகன் (வயது 31). டாக்டர். இவர் அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வந்தார்.

இந்த நிலையில் முத்தரையர்பாளையம் பகுதியில் அவருடைய நண்பர் ஒருவர் இறந்துபோனார். அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் சென்றார். இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு மீண்டும் அவர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார்.

வழுதாவூர் சாலையில் வந்தபோது அந்த பகுதியில் இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது, கில்பர்ட் ரீகன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கில்பர்ட் ரீகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடக்குப்பிரிவு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் பலி; 36 பேர் காயம்
கோக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பலியானார். 36 பேர் காயம் அடைந்தனர்.
2. வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் பார்வையாளர் பலி; 25 பேர் காயம்
அன்னவாசல் அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 25 பேர் காயமடைந்தனர்.
3. நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலி
நாமகிரிப்பேட்டையில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
4. கார் மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பலி
பெரம்பலூர் புறநகர், துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முத்துகுமார்(வயது 39).
5. ஜேடர்பாளையம் படுகையணை ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி
ஜேடர்பாளையம் படுகையணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியானார்.