மாவட்ட செய்திகள்

எத்தனை பேர் இணைந்து வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது - அமைச்சர் காமராஜ் பேட்டி + "||" + No matter how many people join the ADMK , You can not destroy - Minister Kamaraj Interview

எத்தனை பேர் இணைந்து வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது - அமைச்சர் காமராஜ் பேட்டி

எத்தனை பேர் இணைந்து வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது - அமைச்சர் காமராஜ் பேட்டி
எத்தனை பேர் இணைந்து வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மன்னார்குடி, 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்து திட்டங்களை தந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அந்த வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை தேடி அரசு என்ற நிலையை நோக்கி சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்கள் அனைத்து பகுதி களிலும் 342 சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 13 ஆயிரத்து 178 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலினையின் அடிப்படையில் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.112 கோடியே 51 லட்சம் கடன் உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், முன்னாள் நகரசபை தலைவர் சிவராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்.வாசுகிராமன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன், மன்னார்குடி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கலியபெருமாள், வடுவூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் அரிகிரு‌‌ஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசை கவிழ்க்க தி.மு.க.வுடன் இணைந்து சதி செய்தவர் டி.டி.வி.தினகரன். உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை. ரஜினி, கமல் இணைவது நாட்டு மக்களுக்கு பயன்தராது. எத்தனை பேர் இணைந்து வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டங்களால் தமிழகத்தில், குடிநீர் தட்டுப்பாடு இல்லை; அமைச்சர் காமராஜ் பேட்டி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் சிறப்பான நீர் மேலாண்மை திட்டங்களால் தமிழகத்தில், குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
2. தமிழகத்தில், அக்டோபர் 1-ந் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல் - அமைச்சர் காமராஜ் தகவல்
தமிழகத்தில், அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
3. டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தேவைப்பட்டால், 15 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் காமராஜ் பேட்டி
டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தேவைப்பட்டால், 15 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
4. அதம்பாரில், திருமலைராஜன் ஆறு தூர்வாரும் பணி - அமைச்சர் காமராஜ் ஆய்வு
அதம்பாரில் திருமலைராஜன் ஆறு தூர்வாரும் பணியை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.
5. வலங்கைமான் அருகே, வெட்டாற்றில் ரூ.18½ லட்சத்தில் தூர்வாரும் பணி - அமைச்சர் காமராஜ் ஆய்வு
வலங்கைமான் அருகே வெட்டாற்றில் ரூ.18½ லட்சத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.