மாவட்ட செய்திகள்

திருச்சியில் அழுகிய வெங்காய பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம் + "||" + Farmers struggle with rotten onion crops in Trichy

திருச்சியில் அழுகிய வெங்காய பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் அழுகிய வெங்காய பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்
திருச்சியில் அழுகிய வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் அரை நிர்வாண கோலத்தில் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாண கோலத்தில் கழுத்தில் அழுகிய வெங்காய பயிர்களை மாலையாக அணிந்தபடி வந்தனர்.

அவர்கள் வெங்காயம் நன்றாக விளைந்த காலத்தில் குடோன்களில் சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? வெங்காயத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யாதே, வெங்காயம் பயிர் செய்த விவசாயிகளுக்்கு இழப்பீடு வழங்கு, பயிர்கடன்களை தள்ளுபடி செய் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தின்போது நாச்சம்மா என்ற பெண் விவசாயி மயக்கம் அடைந்து தரையில் விழுந்தார். அவரது முகத்தில் உடனடியாக தண்ணீர் தெளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 4 விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாசலில் இருந்து கலெக்டரின் கார் நிறுத்தப்படும் இடம் வரை தரையில் உருண்டபடியே சென்றனர். பின்னர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் அய்யாக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் சென்று மனு கொடுத் தனர்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் கலெக்டர் அலுவலக வாசல் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்கள் தங்களது கைகளில் அழுகிய வெங்காய பயிர்களை தூக்கி பிடித்தபடி இழப்பீடு கேட்டு கோஷம் போட்டனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் துறையூர் தாலுகா செல்லிப்பாளையத்தில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் ரப்பர் புழு தாக்கி அழுகிவிட்டது. தோட்டக்கலை துறை பரிந்துரை செய்த மருந்துகளை அடித்தும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து குவிந்த ஒப்பந்ததாரர்கள் போலீசார் எச்சரிக்கை
திருச்சி வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதற்காக சமூக இடைவெளியை மறந்து ஒப்பந்ததாரர்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
2. திருச்சி விமானநிலையம் அருகே அரசு அதிகாரி ஓட்டி வந்த கார் குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு
திருச்சி விமான நிலையம் அருகே அரசு அதிகாரி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குடிசைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா பரிசோதனை மையங்கள் - கலெக்டர் தகவல்
திருச்சி மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது என்று கலெக்டர் சிவராசு கூறினார். இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
4. திருச்சியில் சிறுமி உயிரிழந்த சம்பவம்; தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
திருச்சியில் 14 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
5. திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை- பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்
திருச்சி அதவத்தூரில் மரணமடைந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை