மாவட்ட செய்திகள்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.500 பரிசு, முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு + "||" + Rs 500 gift unorganized workers, First-Minister Narayanasamy orders

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.500 பரிசு, முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.500 பரிசு, முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.500 பரிசுத்தொகை வழங்க முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, 

புதுவையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக்கோரி முழுஅடைப்பு போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில் அவர்களை அழைத்து அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஜனவரி 10-ந் தேதிக்குள் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் பண்டிகைக்கால பரிசுத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு 2019-20-ம் ஆண்டிற்கான பண்டிகை கால பரிசுத் தொகையாக அந்த சங்கத்தின் 29 ஆயிரத்து 720 உறுப்பினர்களுக்கு தலா ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. அதற்காக ரூ.4.42 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடும்படி நல அமைச்சர் கந்தசாமியுடன் ஆலோசித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு அளித்துள்ளார்.

இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்குகிறது: நாளை மறுநாள் புதுவை பட்ஜெட் - முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. அதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி ரூ.9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
2. அரசின் உத்தரவுகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் - முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை
அரசின் உத்தரவுகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
3. அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் கொரோனா பரவலை தடுக்க இன்று முக்கிய முடிவு - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
புதுவையில் கொரோனா பரவுவதை தடுக்க இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. பாதிப்பாக இருந்தாலும் அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
4. மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நாராயணசாமி ஆலோசனை - போராட்டத்தை கைவிட வலியுறுத்தல்
மின்துறை நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.
5. கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.