மாவட்ட செய்திகள்

கரூர் வஞ்சுலீசுவரர் கோவிலை புனரமைக்கும் பணி தீவிரம் படித்துறையை தூய்மைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை + "||" + Reconstruction of Karur Vanchilleswarar Temple Pilgrims demand to clean up the work area

கரூர் வஞ்சுலீசுவரர் கோவிலை புனரமைக்கும் பணி தீவிரம் படித்துறையை தூய்மைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

கரூர் வஞ்சுலீசுவரர் கோவிலை புனரமைக்கும் பணி தீவிரம் படித்துறையை தூய்மைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை
கரூர் வஞ்சுலீசுவரர் கோவிலை புனரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் பக்தர்கள் புனிதநீராடும் படித்துறையை தூய்மைப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்,

கரூர் நகரானது இலக்கியங்களிலும், கோவில் கல்வெட்டுகளிலும் முன்பு வஞ்சி நகர் என அழைக்கப்பட்டது புலப்படுகிறது. மேலும் வஞ்சுலீசுவரர், கரியமாலீசுவரர், நாகேசுவரர், பசுபதீஸ்வரர், கோடீஸ்வரர் என கோவில்கள் அமையப்பெற்றதால் கரூரானது பஞ்சலிங்கஷேத்திரமாக திகழ்ந்தது. பிரம்மன் தனது தோ‌‌ஷத்தை நீக்குவதற்காக கரூர் பிரம்ம தீர்த்தம் ரோட்டிலுள்ள விசாலாட்சி சமேத வஞ்சுலீசுவரர் கோவில் தீர்த்த குளத்தில் நீராடி படைப்பு தொழிலை தொடங்கினார் என கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க வஞ்சுலீசுவரர் கோவிலை புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி கோவிலில் உள்ள சாமி சிலைகள் உள்ளிட்டவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் மூலஸ்தானத்தை கருங்கற்களால் கட்டமைக்கும் பொருட்டு வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வாஸ்து சாந்தி பூஜை, ஹோமங்கள் கோவிலில் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை கோவில் மூலஸ்தானத்தில் கருங்கற்களை பதித்து பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பாழடைந்த ஆற்றங்கரை படித்துறை

கரூர் வஞ்சுலீசுவரர் கோவில் அருகே ஆன்பொருனை என சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட அமராவதி ஆறு ஓடுகிறது. முன்பு பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் புனிதநீராடுவதற்காக இந்த ஆற்றங்கரையையொட்டி படித்துறை அமைக்கப்பட்டது. எனினும் நீண்ட நாட்களாக இந்த படித்துறை பராமரிக்கப்படாததால் பாழடைந்து குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. மேலும் வேண்டாத செடிகள், சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்டவை படித்துறையையொட்டிய ஆற்றில் முளைத்துள்ளதால் இதனை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இதனை பார்வையிட்டு இங்குள்ள படித்துறையில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆற்றில் முளைத்துள்ள சீமைக்கரு வேலமரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வடகாடு, மாங்காடு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
வடகாடு, மாங்காடு பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. ஜெயங்கொண்டத்தில் ஆவேரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, சாலையோர பூங்கா அமைக்க கோரிக்கை
ஜெயங்கொண்டத்தில் ஆவேரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, சாலையோர பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: குமரி பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
4. புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
5. தடை உத்தரவால் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்
அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்ததால், பக்தர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.