மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் 238 பயனாளிகளுக்கு ரூ.79½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார் + "||" + Lottery program for 238 beneficiaries in Ariyalur district

அரியலூர் மாவட்டத்தில் 238 பயனாளிகளுக்கு ரூ.79½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்

அரியலூர் மாவட்டத்தில் 238 பயனாளிகளுக்கு ரூ.79½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்
அரியலூர் மாவட்டத்தில் 238 பயனாளிகளுக்கு ரூ.79½ லட்சத்தில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டார். விழாவில் சமூக நலத்துறையின் சார்பில் ஒரு பெண் குழந்தையுடன் குடும்ப கட்டுப்பாடு செய்து, கொண்ட 2 தாய்மார்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வைப்புநிதி பத்திரங்களும், 2 பெண் குழந்தைகள் பெற்ற 150 தாய்மார்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வைப்புநிதி பத்திரங்களும், 50 ஏழை பெண்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரங்களையும் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு...

மேலும் அவர் வருவாய்த்துறையின் சார்பில் 30 இந்து இருளருக்கு சாதி சான்றிதழ்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35 ஆயிரத்து 460 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலிகளையும் வழங்கி பேசினார். நடந்த விழாவில் மொத்தம் 238 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.79 லட்சத்து 35 ஆயிரத்து 460 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
2. கருணாநிதி நினைவுநாள்: ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்
கருணாநிதி நினைவுநாள்: ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
3. செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொடைக்கானலில் 500 பேருக்கு நல உதவிகள்
செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொடைக்கானலில் 500 பேருக்கு நல உதவிகள்.
4. நாராயணசாமி தலைமையிலான அரசு 252 அறிவிப்புகளில் ஒன்றைக்கூட செயல்படுத்தவில்லை அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
252 அறிவிப்புகளில் ஒன்றைக்கூட முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தவில்லை என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.
5. மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
சிவகங்கை அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 224 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...