மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை: 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின; கரும்புகள் சாய்ந்தன + "||" + Rainfall in Tanjore district: 1000 acres of paddy fields submerged; The canes were tilted

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை: 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின; கரும்புகள் சாய்ந்தன

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை: 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின; கரும்புகள் சாய்ந்தன
தஞ்சை மாவட்டத்தில் தொடர்மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பொங்கல் கரும்புகளும் சாய்ந்தன. மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழைநீர் வடிவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் எக்டேர் வரை சம்பா, தாளடி நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் கடைமடை பகுதியான பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் பகுதிகளிலும், உய்யகொண்டான் வாய்க்கால் பாசன பகுதியான பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளிலும் நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் இளம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன. தஞ்சை- மன்னார்குடி சாலையில் உள்ள காட்டூர், துறையுண்டார்கோட்டை பகுதிகளில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இந்த நிலையில் 2-வது நாளாக விடிய, விடிய மழை பெய்ததால் மேலும் பல இடங்களில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் அருகே உள்ள சமுத்திரம் ஏரி தொடர் மழையினால் நிரம்பி வழிகிறது.

கரும்புகள் சாய்ந்தன

தஞ்சையை அடுத்த வரவுக்கோட்டை, துறையுண்டார்கோட்டை, சித்திரக்குடி, களிமேடு, சக்கரசாமந்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. பல இடங்களில் 1 அடி உயரத்துக்கும் மேல் மழைநீர் தேங்கி காணப்படுகின்றன. தஞ்சை மாவட்டம் முழுவதும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் 800 ஏக்கரில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீர் தேங்கி காணப்படுகின்றன. கரும்புகள் சாயாமல் இருப்பதற்காக 4 அல்லது 5 கரும்புகளை ஒன்றாக சேர்த்து கட்டி வைத்துள்ளனர். இருப்பினும் பல இடங்களில் கரும்புகள் மழைக்கு சாய்ந்து விட்டன.

வடிவதில் தாமதம்

மழை தொடர்ந்து பெய்து வருவதால் வடிகால்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நெற்பயிர்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் மழைநீர் வடியாமல் தேங்குவது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை:நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
2. தமிழகத்தில் பெய்து வரும் மழை: உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
3. கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதா? பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் புதிய தகவல்
டேபிள் டாப் விமான நிலையங்களில் ஓடுதளத்திற்குள் விமானத்தை நிறுத்த முடியாவிட்டால், அதை மீறி விமானம் ஓடுவதற்கு இடம் இல்லை என்பது ஆபத்தான விஷயம்
4. சூறாவளி காற்றுடன் பலத்த மழை 362 மரங்கள் சாய்ந்தன; வாகனங்கள் நொறுங்கின பெரும் பாதிப்பை சந்தித்த மும்பை
மும்பையில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் நேற்று முன்தினம் இரவு வரை 3 நாட்களாக பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
5. மும்பையில் சூறாவளி காற்றுடன் 3-வது நாளாக மழை 2 மின்சார ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின 200 பயணிகள் மீட்பு
மும்பையில் சூறாவளி காற்றுடன் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் 2 மின்சார ரெயில்கள் வெள்ளத்தில் சிக்கின.